முகப்பு
இந்தியா

புதுவையில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,942 பேருக்குத் தொற்று

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,942 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
புதுவையில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 1,942 பேருக்குத் தொற்று
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,942 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை மூத்த அதிகாரி வெளியிட்ட தகவலின்படி, 

புதுவையில் கடந்த சில நாள்களாக தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து இதுவரை மொத்த பாதிப்பு 78,973 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார மற்றும்
குடும்ப நல சேவைகள் இயக்குநர் எஸ்.மோகன் குமார் தெரிவித்தார். 

ஒரேநாளில் 9,292 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், 1,942 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது 16,568 பேர் மருத்துவமனை
சிகிச்சையில் உள்ளனர். மேலும், 912 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர்.

இதுவரை புதுவையில் 8.89 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments