இந்தியா

நாட்டில் 50 % மக்கள் முகக்கவசம் அணியவில்லை: சுகாதார அமைச்சகம்

ANI

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுடன் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஒரு ஆய்வின்படி நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத மக்கள்  முகக்கவசம் அணியவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் 50 சதவீத மக்கள் இன்னும் முகக்கவசம் அணியவில்லை என்றும், முகக்கவசம் அணிந்தவர்களில் 64 சதவீதம்  சரியான முறையில் அணியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

தற்போது வரை, 9 மாநிலங்களில் 50,000 முதல் 1 லட்சம் வரை மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், 19 மாநிலங்களில் 50,000-க்கும் குறைவானவர்கள்  சிகிச்சையிலும் உள்ளனர். 

கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில மாநிலத்தில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாகத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது கவலைக்குரியதாக உள்ளது என்று  அவர் தெரிவித்தார். 

ஒரு நபர் உடல் ரீதியான விலகலைப் பின்பற்றவில்லை என்றால், அந்த நபரால் ஒரே மாதத்தில் 406 பேர் பாதிக்கப்படுவார்கள் என்று அகர்வால் நடத்திய  ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார். 

சமூக இடைவெளி மிகவும் முக்கியமானது. இதேபோன்று முகக்கவச பயன்பாடும் மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட நபரும் நோய்த்தொற்று இல்லாத நபரும்  முகக்கவசம் அணியவில்லை என்றால், தொற்று பரவல் 90 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT