முகப்பு
இந்தியா

கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தில்லி தயாராகி வருகிறது: கேஜரிவால்

கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தில்லி அரசு தயாராகி வருவதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தில்லி அரசு தயாராகி வருவதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் ஆலையை நேரில் ஆய்வு செய்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சீனாவிலிருந்து சுமார் 6,000 ஆக்ஸிஜன் உருளைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த ஆக்ஸிஜன் ஆலையின் உற்பத்தித் திறன் 55 மெட்ரிக் டன்கள். இதற்காக சீனாவிலிருந்து சுமார் 6,000 ஆக்ஸிஜன் உருளைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதனைத் தவிர, இந்த கரோனா காலத்தில் வேறு எதுவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்று கூறினார்.

தில்லியில் ஏப்ரல் 19-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →