இந்தியா

விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சார்பாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது: ப.சிதம்பரம் 

DIN

விவசாயிகள் போராட்டம் 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சார்பாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது என்ற ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 

மத்திய அரசு கொண்டு வந்த பேரழிவு வரும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் ஒரு தொற்றுநோய்க்கான போராட்டத்தின் மத்தியிலும் போராட்டம் நடத்தி வருவது என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. விவசாயிகள் போராட்டம் 6 மாதங்களைக் கடந்துள்ளது. ஆனால், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சார்பாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது. 

மத்திய அரசு புதிய திருப்பமாக, கரோனா வைரஸ் காலத்துக்கு மத்தியிலும் போராட்டம் நடத்தப்படுவது சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, கரோனா தொற்று காலத்திலும் அழிவுதரக்கூடிய வேளாண் சட்டங்கள் நீண்டகாலமாக இருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. விசாயிகளும் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள், அரசும் பிடிவாதமாக இருக்கிறது. 

மக்களின் சேவனகாக மத்திய அரசு இருந்தால், பொதுமக்கள் கருத்தைக் கேட்க வேண்டும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதிய ஆலோசனைகளைத் தொடங்க வேண்டும் ” எனத் தெரிவி்த்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT