தீபாவளி பண்டிகைக்கு பின்னான தரவுகளின் அடிப்படையில் தில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவை எட்டியுள்ளது.
தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக் காட்டிலும் தில்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
ஜன்பாத் பகுதியில் காற்று மாசின் அளவு 655.07 எனும் அளவை எட்டியுள்ளது.
இதையும் படிக்க | நிலக்கரி உற்பத்திக்கு தடைகோரும் ஒப்பந்தத்தை தவிர்த்த வளர்ந்த நாடுகள்
பட்டாசு வெடிப்பதற்கு தில்லி அரசு தடை விதித்திருந்தாலும் நகரின் பல்வேறு பகுதிகளில் பாட்டசுகள் வெடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு தில்லியில் காற்று மாசு தீவிரமான அளவைக் கடந்த நிலையில் தற்போது அபாயகரமான அளவை எட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.