யம்தோங் ஹொகிப் | ராஜ்குமார் இமோ சிங் 
இந்தியா

மணிப்பூர்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள்

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர் இன்று பாஜகவில் இணைந்தனர். 

DIN

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர் இன்று பாஜகவில் இணைந்தனர். 

மணிப்பூரில் அடுத்த ஆண்டு(2022) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சிகள் அங்கு தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜ்குமார் இமோ சிங் மற்றும் யம்தோங் ஹொகிப் ஆகிய இருவரும் பாஜகவில் இன்று இணைந்தனர். 

பாஜகவில் இணைந்த ராஜ்குமார் இமோ சிங்

மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் பாஜக தலைவர் சம்பித் பத்ரா தலைமையில் அவர்கள் பாஜகவில் இணைந்தனர். 

இருவரும் பாஜகவில் இணைந்ததை வரவேற்பதாகவும் அனைவரும் ஒன்றிணைந்து வரும் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்வோம் என்றும் சம்பித் பத்ரா தெரிவித்தார். 

பாஜகவில் இணைந்த யம்தோங் ஹொகிப்

கடந்த 2020 ஆகஸ்ட் 20 அன்று மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி, ராஜ்குமார் இமோ சிங்கை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT