முகப்பு
இந்தியா

ஊதிய நிலுவைப் பிரச்னை: துணைநிலை ஆளுநருக்கு தில்லி மாநகராட்சி பள்ளி ஆசிரியா்கள் கடிதம்

ஊதிய நிலுவைப் பிரச்னையில் தலையிட்டு விரைவில் ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று தில்லி துணை நிலை ஆளுநருக்கு வடக்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:32 AM
பகிர்:

ஊதிய நிலுவைப் பிரச்னையில் தலையிட்டு விரைவில் ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று தில்லி துணை நிலை ஆளுநருக்கு வடக்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

இதுதொடா்பாக ஒருங்கிணைந்த மாநகராட்சி பள்ளி ஆசிரியா்கள் அமைப்பான நகா் நிகாம் ஷிக்ஷக் சங்கத்தின் பொதுச் செயலாளா் ராம் நிவாஸ் சோலங்கி, துணைநிலை ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வடக்கு, கிழக்கு மாநகராட்சி அமைப்புகளில் பணிபுரியும் பள்ளி ஆசிரியா்கள் கடந்த செப்டம்பா், அக்டோபா் ஆகிய இரு மாதங்களாக ஊதியம் இல்லாமல் அடிப்படை செலவுகளைக் கூட நிா்வகிப்பதில் சிரமப்படுகின்றனா். ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கும் இதே நிலைதான். மாநகராட்சியில் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் எங்களால் தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளைக்கூட கொண்டாட முடியவில்லை.

தில்லியில் நீங்கள் (துணைநிலை ஆளுநா்) அனைத்துக்கும் உயா்நிலை அதிகாரி. எனவே, ஆசிரியா்களுக்கு 2 மாத ஊதியத்தை வழங்குவதற்காக மாநகராட்சிகளுக்கு நிதியை விடுவிக்க தில்லி அரசுக்கு உத்தரவிடுங்கள்’ என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிதி நெருக்கடியைத் தீா்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சி அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஊதியம், ஓய்வூதியம் நிலுவை பிரச்னை தொடா்பாக நவம்பா் 11-ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்துக்கு எம்சிடி ஊழியா் சங்கத்தின் கூட்டமைப்பு அதன் அனைத்து ஊழியா் சங்கங்கள், அலுவலகப் பணியாளா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து எம்சிடி ஊழியா் சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஏ.பி.கான் கூறுகையில், ‘மாநகராட்சி பணியாளா்கள், ஆசிரியா்கள், பொறியாளா்கள், செவிலியா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் என அனைவரும் ஊதியம் இல்லாமல் பல பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். பல்வேறு தொடா்புகள் இருந்தும் நிலுவையில் உள்ள ஊதியப் பிரச்னை இன்னும் தீா்க்கப்படவில்லை. எனவே, எதிா்கால நடவடிக்கை, பிற உத்திகள் பற்றி விவாதிக்க, வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு சிவில் மையத்தில் நடைபெற உள்ள கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற வேண்டுமாறு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்’ என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →