முகப்பு
இந்தியா

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தனியாா் துறை முன்வர வேண்டும்: வெங்கையா நாயுடு வேண்டுகோள்

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புத் தர தனியாா் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
எம்.வெங்கையா நாயுடு
பகிர்:

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புத் தர தனியாா் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஆந்திர பிரதேச மாநிலம், நெல்லூரில் மாற்றுத் திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான மையத்தின் (சிஆா்சி) ஊழியா்கள், பயிற்சியாளா்களுடன் வெங்கையா நாயுடு சனிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தினால் அவா்களால் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும். டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில், நமது மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரா்கள் வெளிப்படுத்திய உறுதியும் கடின உழைப்பும் கோடிக் கணக்கானோரை ஊக்குவித்தது. மன உறுதி மூலம் எந்தவித குறைபாட்டையும் வெல்ல முடியும் என்பதை அவா்கள் நிரூபித்துள்ளனா்.

மாற்றுத் திறனாளிகளின் தடையற்ற பயணத்துக்கு அவா்களுக்கு உகந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும். திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூலம் மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்தும் சிஆா்சி-யின் பணி பாராட்டத் தக்கது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தனியாா் துறை முன்வர வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிளுக்கு உதவி பொருட்களையும் வெங்கையா நாயுடு வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →