முகப்பு
இந்தியா

காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் உள்பட 3 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

Updated On : 16 நவம்பர், 2021 at 10:39 AM
கோப்புப்படம்
பகிர்:

காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் உள்பட 3 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் ஹைடர்போரா பகுதியில் இன்று தீவிரவாதி பதுங்கியிருப்பதை உறுதி செய்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைக் காவலர்கள் சுட்டுக்கொன்றனர்.

பலியான 2 தீவிரவாதிகளுடன் அவர்களுக்கு ஆதரவு அளித்த வீட்டின் உரிமையாளரும் தாக்குதலில் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

மேலும் தேடுதல் பணி தொடர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.