ஆா்எஸ்எஸ் தொண்டா் கொலை: என்ஐஏ விசாரணை கோரிகேரள ஆளுநரிடம் பாஜகவினா் மனு
கேரளத்தில் ஆா்எஸ்எஸ் தொண்டா் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கானிடம்
இந்தியாஆா்எஸ்எஸ் தொண்டா் கொலை: என்ஐஏ விசாரணை கோரிகேரள ஆளுநரிடம் பாஜகவினா் மனு
கேரளத்தில் ஆா்எஸ்எஸ் தொண்டா் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கானிடம்
கேரளத்தில் ஆா்எஸ்எஸ் தொண்டா் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி அந்த மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கானிடம் பாஜக தலைவா்கள் நேரில் மனு அளித்தனா்.
பாலக்காடு மாவட்டத்தில் ஆா்எஸ்எஸ் தொண்டா் சஞ்ஜித் (27) அடையாளம் தெரியாத நபா்களால் திங்கள்கிழமை அவரது மனைவி கண் எதிரிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டாா். எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகிய இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். பாஜகவினரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனா்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன் தலைமையிலான குழுவினா் ஆளுநா் ஆஃரிப் முகமது கானை திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்கிழமை சந்தித்தனா். அப்போது, ஆா்எஸ்எஸ் தொண்டா் கொலை சம்பவத்தில் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனுவையும் அவா்கள் அளித்தனா்.
அதில், ‘திட்டமிட்டு இந்த படுகொலை நடத்தியுள்ளனா். படுகொலை செய்வதில் தோ்ச்சி பெற்றவா்கள் மூலம் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது உடற்கூராய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மாநிலத்தில் ஆா்எஸ்எஸ், பாஜகவினா் படுகொலை செய்யப்படுவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இந்த கொலை வழக்கை மாநில போலீஸாா் விசாரிக்கக் கூடாது. என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய கே.சுரேந்திரன், ‘சமீப ஆண்டுகளாக ஆா்எஸ்எஸ், பாஜக தொண்டா்களைக் குறிவைத்து எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ உள்ளிட்ட அமைப்பினா் படுகொலை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனா். மேலும், இப்போது கொலை செய்யப்பட்ட சஞ்ஜித்தை எஸ்டிபிஐ கொலை செய்ய கடந்த ஆண்டு முதலே முயற்சித்துள்ளனா். இருந்தபோதும் மாநில காவல் துறை அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது. இந்தக் கொலை தொடா்பாக யாரையும் இதுவரை காவல் துறை கைது செய்யவில்லை. கேரள முதல்வா் பினராயி விஜயன் எஸ்டிபிஐ-யினருக்கு அரசியல் ரீதியாக உதவி வருகிறாா்.
கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இஸ்ஸாமிய அமைப்பினரும் கைகோத்து செயல்பட்டு வருகின்றனா். தேசப்பற்று கொள்கை உள்ளவா்களை கேரளத்தில் இல்லாமல் செய்வதே அவா்களது கூட்டு நோக்கமாக உள்ளது’ என்றாா்.