இந்தியா

நாளை (நவ.17) முதல் திறக்கப்படுகிறது கர்தார்பூர் வழித்தடம்

DIN

சீக்கியர்களின் புனிதத் தலமாக கருதப்படும் குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள நாளை முதல் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள்  குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 2018ஆம் ஆண்டில் இருநாட்டு சீக்கியர்களும் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கும் இடையே கர்தார்பூர் வழித்தடம் ஏற்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக கர்தார்பூர் வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில் சீக்கியர்களின் குருவான குருநானக் தேவ்வின் பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் திறக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT