சீக்கியர்களின் புனிதத் தலமாக கருதப்படும் குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள இன்று கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த 2018ஆம் ஆண்டில் இருநாட்டு சீக்கியர்களும் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கும் இடையே கர்தார்பூர் வழித்தடம் ஏற்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க | பலத்த மழையைப் பொருட்படுத்தாது சபரிமலையில் பக்தர்கள் வழிபாடு
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக கர்தார்பூர் வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில் சீக்கியர்களின் குருவான குருநானக் தேவ்வின் பிறந்த நாளை முன்னிட்டு இன்றுமுதல் மீண்டும் திறக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, எதிர்க்கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும், புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.