100 நாடுகளுக்கு 6.5 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி: பிரதமர் மோடி
ஏறத்தாழ 100 நாடுகளுக்கு 6.5 கோடி கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்தியா100 நாடுகளுக்கு 6.5 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி: பிரதமர் மோடி
ஏறத்தாழ 100 நாடுகளுக்கு 6.5 கோடி கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஏறத்தாழ 100 நாடுகளுக்கு 6.5 கோடி கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
மருந்தக துறையின் முதல் உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி வியாழக்கிழமை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ஏறத்தாழ 100 நாடுகளுக்கு இந்தியா 6.5 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளதாகக் கூறினார்.
அவர் மேலும் பேசியது:
"வாழ்வியல் முறை அல்லது மருந்துகள் அல்லது மருத்துவத் தொழில்நுட்பம் அல்லது தடுப்பூசி என எதுவாக இருந்தாலும், உடல் ஆரோக்கியம் சார்ந்த அனைத்துத் துறைகளும் கடந்த 2 வருடங்களில் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளன.
இதையும் படிக்க | மழை பாதிப்பு: தமிழகம் வருகிறது மத்தியக் குழு
இந்த சூழலில் இந்திய மருந்தகத் துறை சவாலுக்கு ஏற்ப உயர்ந்துள்ளது. இந்திய சுகாதாரத் துறை சம்பாதித்துள்ள உலகளாவிய நம்பிக்கை சமீப காலங்களில் இந்தியாவை 'மருந்தக உலகம்' என்று அழைப்பதற்கு வழிநடத்தியுள்ளது.
பெருந்தொற்றின் தொடக்க காலத்தில் உயிர் காக்கும் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். இந்தாண்டு 6.5 கோடி கரோனா தடுப்பூசிகளை ஏறத்தாழ 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்" என்றார் பிரதமர் மோடி.