கோப்புப்படம் 
இந்தியா

வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டதற்கு இதுவே காரணம்: விளக்கிய அகிலேஷ் யாதவ்

விவசாயிகள் அதிகம் வாழும் உத்தரப் பிரதேசத்தில் குறிப்பாக மாநிலத்தின் மேற்கு பகுதியில் மத்திய அரசின் முடிவால் திருப்புமுனை ஏற்படும் என பாஜக நம்பிவருகிறது.

DIN

ஓராண்டுக்கு மேலாக தெருக்களில் இறங்கி விவசாயிகள் போராடுவதற்கு காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மோடி அறிவித்துள்ளார். இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் மோடிக்கு நன்றி தெரிவித்துவருகின்றனர்.

"தொழிற்சங்கங்கள் எதிர்த்துப் போராடி வரும் விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த பிரதமரின் உரையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த சட்டங்கள் நாட்டின் நலனுக்காக இருந்தாலும் அதற்கு எதிரான குரல்களை புறக்கணிக்க முடியாது.

இதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் பேச்சுவார்த்தை, இதற்காக பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும்" என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.

மோடியின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் அதிகம் வாழும் உத்தரப் பிரதேசத்தில் குறிப்பாக மாநிலத்தின் மேற்கு பகுதியில் திருப்புமுனை ஏற்படும் என பாஜக நம்பிவருகிறது. ஆனால், வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் மீதான கோபம் லக்கிம்பூர் கெரியில் சம்பவத்தால் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச தேர்தல் காரணமாகவே வேளாண் சட்டங்கள் திரும்பபெறப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மோடி அரசை நம்ப முடியக் கூடாது. தேர்தலுக்குப் பிறகு சட்டங்களை மீண்டும் கொண்டு வர வாய்ப்புள்ளது.

இந்த போலி வாக்குறுதி தங்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் என்று பாஜகவினர் நினைக்கின்றனர். ஆனால் மக்கள் இதையெல்லாம் புரிந்துகொண்டுள்ளார்கள். வாக்குகளுக்காக சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. லக்கிம்பூர் கொலையாளிகள் எப்படி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்?

விவசாயிகள் அவர்களை துடைத்து எறிவார்கள். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. பாஜகவினர் வாக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT