விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் 
இந்தியா

‘நாடாளுமன்றத்தில் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்’: ராகேஷ் திகைத்

நாடாளுமன்றத்தில் சட்டங்கள் முறையாக திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என  பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

DIN

நாடாளுமன்றத்தில் சட்டங்கள் முறையாக திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என  பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களிடையே இன்று பேசிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முறையாக திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் கூறுகையில்,

தற்போதைக்கு போராட்டங்கள் திரும்பப் பெறப்படாது. நாடாளுமன்றத்தில் முறையாக சட்டங்களை திரும்பப் பெறும் நாள் வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11 மாதங்களுக்கு மேலாக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT