இந்தியா

உலக மீன்வள தினம்: சிறந்த கடல்சார் மாநிலமாக ஆந்திரம் தேர்வு

DIN

உலக மீன்வள தினமான நேற்று(நவ.21) இந்தியாவின் சிறந்த கடல்சார் மாநிலமாக ஆந்திரம்  தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

உலக மீன்வள தினமான நேற்று(நவ.21) ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில்  மீன்வளத் துறையில் சிறந்த பங்களிப்பை அளிக்கும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மத்திய மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா  விருதை அறிவித்தார்.

அதில் நாட்டின் சிறந்த கடல்சார் மாநிலமாக ஆந்திரமும், உள்நாட்டு மீன்வளத்துறையில் சிறந்த மாநிலமாக தெலுங்கானாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் மத்தியபிரதேசத்தின் பாலாகாட், உள்நாட்டு மீன்வளத்துறையில் சிறந்த மாவட்டமாகவும்  ஒடிசாவின் பாலோசோர் சிறந்த கடல்சார் மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டன.

சிறந்த மலைசார் மற்றும் வடகிழக்கு மாநிலமாக திரிபுராவும், அசாம் மாநிலத்தின் போன்கைகான் சிறந்த மாவட்டமாகவும் தேர்வு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT