காஷ்மீர்: கடும் குளிரால் மக்கள் அவதி
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பனிக்காலம் துவங்கிய நிலையில் முதல்முறையாக குளிர் மைனஸ் 1.6யைப் பதிவு செய்திருக்கிறது.
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பனிக்காலம் துவங்கிய நிலையில் முதல்முறையாக தலைநகர் ஸ்ரீநகரில் குளிர் மைனஸ் 1.6யைப் பதிவு செய்திருக்கிறது.
இந்தக் கடும் குளிரால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து சிக்கல்களும் அதிகரித்திருக்கிறது.
காஷ்மீரின் பல பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலைப் பதிவாகி வருவதால் ஸ்ரீநகரில் மைன்ஸ் 1.6 ஆகவும் பஹல்ஹாமில் மைனஸ் 3.0 ஆகவும் வெப்பநிலை கடுமையாக குறைந்திருக்கிறது . மேலும் , அதிகபட்சமாக லடாக்கில் மைனஸ் 12 டிகிரி அளவு குளிர் பதிவாகியிருக்கிறது.
இந்நிலையில் வருகிற நவ.24 மற்றும் 25 ஆம் தேதிகளில் இன்னும் கடுமையான குளிர் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.