முகப்பு
இந்தியா

'ஆந்திரத்திற்கு 3 தலைநகரங்கள் இல்லை'

ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை அம்மாநில அரசு திரும்பப் பெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை அம்மாநில அரசு திரும்பப் பெற்றது.

3 தலைநகரங்களை எதிர்க்கும் வழக்கின் விசாரணை இன்று (நவ.22) நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவையில் இருந்து 3 தலைநகரங்களாக பிரிக்கும் மசோதா திரும்பப் பெறப்பட்டது.

ஆந்திரத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றதும் ஆந்திரத்தில் நிர்வாக வசதிக்காக 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். 

நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினமும், சட்டப்பேரவை தலைநகராக அமராவதியும், நிதித்துறை தலைநகராக கர்னூலும் செயல்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு விவசாயிகள் மத்தியிலும், ஒருசில அமைப்புகளிடையேயும் எதிர்ப்புகள் எழுந்தன.

இது தொடர்பான மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கீழவையில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலவையில் எதிர்ப்புகள் எழுந்தன. இதனிடையே 3 தலைநகரங்களாக பிரிக்கும் மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று நீதிபதி பி.கே.மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இதில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்குரைஞர் 3 தலைநகரங்கள் தொடர்பான சட்டங்களைத் திரும்பப் பெறுவது என அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். இது தொடர்பான மசோதாவை சட்டப்பேரவையில் இருந்து திரும்பப் பெறுவதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து சட்டப்பேரவையிலிருந்து 3 தலைநகரங்கள் உருவாக்கும் மசோதா திரும்பப் பெறப்பட்டது,
 

முழு கட்டுரையைப் படிக்க →