கோப்புப்படம் 
இந்தியா

டிசம்பர் 1-இல் அதிமுக செயற் குழுக் கூட்டம்

டிசம்பர் 1-ம் தேதி அதிமுக செயற் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளனர்.

DIN


டிசம்பர் 1-ம் தேதி அதிமுக செயற் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"அதிமுக செயற்குழு கூட்டம் டிசம்பர் 1-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் எம்ஜிஆர் மாளிகையில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும்.

கழக செயற் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கழக செயற் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்."

பாஜகவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் இணைந்தது, சசிகலாவை கட்சியில் இணைப்பது, வேதா இல்லம் அரசுடைமையாக்கியது செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது உள்ளிட்ட விவகாரங்கள் அரங்கேறி வரும் நிலையில் அதிமுக செயற் குழு கூட்டம் கூடுகிறது.

முன்னதாக, இன்று (புதன்கிழமை) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT