டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி பாதிப்பிற்கு கோவேக்சின் தடுப்பூசி நல்ல பலனை அளிப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் தீநுண்மி பரவும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள நிலையில், கோவேக்சின் தடுப்பூசி டெல்டா பிளஸ் தீநுண்மிக்கு எதிராக 50 சதவிகிதம் பலனளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்டா வகை கரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட மற்ற வகைகளைக் காட்டிலும் 30 முதல் 70 சதவீதம் வரை வேகமாகப் பரவுவது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்கும் டெல்டா கரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மற்றும் சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி பாதிப்பிற்கு கோவேக்சின் தடுப்பூசி 50 சதவிகிதம் பலனளிப்பதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையின்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் 2,714 பேருக்கு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் 14 நாள்களுக்குப் பிறகுஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 1,617 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. எஞ்சிய 1,097 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு ஏற்படவில்லை. இதன் மூலம் கோவேக்சின் தடுப்பூசி 50 சதவிகிதம் வரை பலனளிப்பதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.