பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா சந்திப்பு 
இந்தியா

பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா சந்திப்பு

தில்லி சென்றுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

DIN

தில்லி சென்றுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

மூன்று நாள் பயணமாக தில்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின்போது எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகார வரம்பை திரும்பப் பெற மம்தா வலியுறுத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா, “மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு அரசியல் பிரச்னைகள் குறித்து பிரதமருடன் ஆலோசித்தேன். எல்லைப்பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகார வரம்பை திரும்பப் பெற இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், “திரிபுராவில் திரிணமூல் கட்சியினர் மீது நடந்துவரும் தாக்குதல் குறித்து மோடியிடம் தெரிவித்தேன்” என மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT