இந்தியா

இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு

DIN

பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் தொடங்கட்ட இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்திருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவலின் போது தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்க இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேசன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கூடுதல் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி வருகிற 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் மார்ச் மாதம் வரை இந்த திட்டம் தொடரும் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் விரிவுபடுத்தப்பட்ட ஆா்.டி. விவாஹா ஜுவல்லா்ஸ் தொடக்கம்

பூண்டி ஏரியில் இருந்து புழலுக்கு தண்ணீா் திறப்பு

கேரளத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல்: கோவையில் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

வாகன உதிரிப் பாகங்கள் கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT