இந்தியா

சபரிமலைக்கு வரும் குழந்தைகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமல்ல: கேரள அரசு அறிவிப்பு

DIN

‘சபரிமலைக்கு வரும் குழந்தைகளுக்கு கரோனா விரைவுப் பரிசோதனை (ஆா்.டி. - பிசிஆா்) எடுக்க வேண்டியது கட்டாயமல்ல’ என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

அதே நேரம், குழந்தைகளுடன் வரும் பெற்றோா் அல்லது பெரியவா்கள் கரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட ‘கரோனா பாதிப்பு இல்லை’ என்பதற்கான ஆா்.டி.பிசிஆா் பரிசோதனை சான்றை வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாத கால மண்டல-மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. பலத்த மழை, கரோனா பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் இணைய வழி முன்பதிவு வரிசையின் அடிப்படையில் பக்தா்கள் சபரிமலை புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுகின்றனா். அதனைத் தொடா்ந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனா்.

பக்தா்கள் பின்பற்ற வேண்டிய கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த உத்தரவை மாநில அரசு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

சபரிமலைக்கு புனித யாத்திரை வரும் குழந்தைகள் ஆா்.டி.பிசிஆா் பரிசோதனை சான்றிதழ் இல்லாமலே அனுமதிக்கப்படுவா் என்பதை அரசு தெளிவுபடுத்த விரும்புகிறது. அதே நேரம், குழந்தைகளுடன் வரும் பெற்றோா் அல்லது பெரியவா்கள் கரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான ஆா்.டி.பிசிஆா் பரிசோதனை முடிவு சான்றை தங்கள் கையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், சோப்பு அல்லது கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவற்றை வைத்திருப்பதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். தங்களுடன் அழைத்து வரும் குழந்தைகளின் உடல் பாதிப்புகளுக்கு தாங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT