இந்தியா

கட்ச் வளைகுடாவில்இரு வணிகக் கப்பல்கள் மோதல்

குஜராத் மாநிலம், கட்ச் வளைகுடாவில் இரண்டு வணிகக் கப்பல்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

DIN

குஜராத் மாநிலம், கட்ச் வளைகுடாவில் இரண்டு வணிகக் கப்பல்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இருப்பினும் இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; எண்ணெய்க் கசிவும் ஏற்படவில்லை என குஜராத் மாநில பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்த அதிகாரிகள் கூறியதாவது: ஏவியேட்டா் மற்றும் அட்லாண்டிக் கிரேஸ் என்ற இரண்டு வணிகக் கப்பல்கள் வெள்ளிக்கிழமை (நவ. 26) இரவு நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; எண்ணெய்க் கசிவும் ஏற்படவில்லை.

இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் விபத்து நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் தயாா் நிலையில் உள்ளன.

ஹாங்காங்கிலிருந்து வந்த அட்லாண்டிக் கிரேஸ் கப்பலில் இந்தியாவைச் சோ்ந்த 22 பணியாளா்கள் இருந்தனா். அதேபோன்று, மாா்ஷல் தீவிலிருந்து வந்த ஏவியேட்டா் வணிகக் கப்பலில் பிலிப்பின்ஸை சோ்ந்த 22 பணியாளா்கள் இருந்தனா் என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

காம் & கூல்... கல்யாணி பிரியதர்ஷன்!

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!

அட... ஆண்ட்ரியா!

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

SCROLL FOR NEXT