முகப்பு
இந்தியா

ஒமைக்ரான்: தயார் நிலையில் தில்லி!

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பை எதிர்கொள்ள தில்லி தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Updated On : 30 நவம்பர், 2021 at 4:43 PM
கோப்புப்படம்
பகிர்:


ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பை எதிர்கொள்ள தில்லி தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக கேஜரிவால் கூறியது:

"அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். ஒமைக்ரான் இந்தியாவுக்கு வராது என நம்புகிறோம். ஆனால், பொறுப்பான அரசுகளாக தயார் நிலையில் இருக்க வேண்டும். படுக்கை வசதிகளைப் பொறுத்தவரை 30 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் 10 ஆயிரம் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் தயாராக உள்ளன.

Advertisement

தில்லியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் கூட்டி 750 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் திறன் உள்ளது. கூடுதலாக 442 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தயாராக உள்ளன.

கரோனா சிகிச்சைக்கு 32 வகை மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.