இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் பதவியேற்பு

DIN

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட எல்.முருகன் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

மத்திய அமைச்சராக இருந்த தாவா்சந்த் கெலாட் கா்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட இடம் காலியானது.

அந்த இடத்துக்கான இடைத்தோ்தல் அக்டோபா் 4-ஆம் தேதி நடைபெற்ற நிலையில்  பாஜக சாா்பில் தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன்   போட்டியிட்ட நிலையில் வேறுயாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவா் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்

இந்நிலையில் அவர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் வெள்ளிக்கிழமை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். 

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது அவா் கப்பல், துறைமுகங்கள், ஆயுஷ் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT