இந்தியா

நாட்டில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 24,354 பேருக்கு தொற்று; 311 பேர் பலி

DIN

புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இரு நாள்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 24,354 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 25,455 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் சனிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 24,354 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,91,061-ஆக உயா்ந்துள்ளது. 

25,455 தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,30,68,599 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,73,889-ஆக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 97.86 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.81 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 234 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,48,573-ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தோரின் விகிதம் 1.33 சதவிகிதமாக உள்ளது. 

நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான கேரளத்திலும் தொடர்ந்து பாதிப்பும், பலியும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்13,834 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 88,74,81,554 கோடியாக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 69,33,838 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 57,19,94,990 பரிசோதனைகளும், வெள்ளிக்கிழமை மட்டும் 14,29,2548 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT