கோப்புப்படம் 
இந்தியா

பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்கா காந்திக்கு துணை நிற்பேன்: சித்து உறுதி

பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்கா காந்திக்கு துணை நிற்பேன் என சித்து உறுதி தெரிவித்துள்ளார்.

DIN

பஞ்சாப் காங்கிரஸ் அரசில் ஏற்பட்டுள்ள குழப்பம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியுடன் மாநில காங்கிரஸ் தலைவா் பதவிலிருந்து விலகிய நவ்ஜோத் சிங் சித்து ஆலோசனை நடத்தினார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து தொடா்ந்து நீடிப்பார் என்றும் அதிருப்தி பிரச்னைகளுக்கு தீா்வு காண பஞ்சாப் முதல்வா் சரண்ஜித், மாநில தலைவா் சித்து, கட்சி மேலிட நிர்வாகிகள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்கா காந்திக்கு துணை நிற்பேன் என சித்து உறுதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கொள்கைகளை நிலைநாட்டுவேன். 

பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு துணையாக நிற்பேன். எல்லா எதிர்மறை சக்திகளும் என்னை தோற்கடிக்க முயற்சிக்கட்டும், ஆனால், நேர்மறை ஆற்றலின் மூலம் பஞ்சாப்பை வெல்லச் செய்வேன். பஞ்சாப் வெற்றிபெறும். பஞ்சாப் மக்கள் வெற்றிபெறுவார்கள்" என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் மேலிடத்தின் மீதான அதிருப்தி, மாநில தலைவா் சித்துவுடனான மோதல் காரணமாக முதல்வா் பதவியை அமரீந்தா் சிங் அண்மையில் ராஜிநாமா செய்தார் இதையடுத்து, அமரீந்தா் சிங் அமைச்சரவையில் இருந்த சரண்ஜீத் சிங் சன்னியை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

சரண்ஜீத் சிங் சன்னி முதல்வராக பதவியேற்றவுடன் நியமித்த காவல் துறை தலைவா் இக்பால் பிரீத் சிங் சஹோட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சித்து, கட்சித் தலைமைக்கு ராஜிநாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை அனுப்பினார். சித்துவுக்கு ஆதரவாக அமைச்சா் ஒருவரும் ராஜிநாமா செய்தார். சித்துவின் கடித்ததை கட்சி மேலிடம் இன்னும் ஏற்று கொள்ளவில்லை. இதனால் பஞ்சாப் அரசில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.

முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னிக்கும், சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, சித்துவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என்று முதல்வா் தெரிவித்திருந்தார். அதன்படி, சன்னி, சித்து ஆகியோருக்கிடையே சந்திப்பு நடைபெற்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT