இந்தியா

உ.பி. வன்முறை: பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு

DIN

லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 
உ.பி. மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா். துணை முதல்வா் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜகவினா் சென்ற வாகனங்கள் போராட்டம் நடைபெற்ற இடம் வழியாகச் சென்றபோது, வாகனங்களை நோக்கிகல்வீச்சு நடைபெற்ாகக் கூறப்படுகிறது. 

இதில் வாகன வரிசையில் இறுதியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து போராட்டக்காரா்கள் மீது மோதிக் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள், அந்தக் காரை சிறைபிடித்து, தீ வைத்தனா். காரில் பயணித்த சிலரை அவா்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இந்தச்சம்பவத்தில் காரில் பயணித்த பாஜகவினா் 4 போ், விவசாயிகள் 4 போ் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா். 
இந்த சம்பவத்துக்குப் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில் நேற்றைய மோதலில் காயமடைந்த பத்திரிகையாளர் ராமன் காய்சியப் மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT