மைசூரு தசரா கொண்டாட்டத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அனுமதியில்லை 
இந்தியா

தசரா: 10,000 பேருக்கு அனுமதி; குழந்தைகள், முதியவர்களுக்கு மறுப்பு

மைசூரு தசரா கொண்டாட்டத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியருடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மைசூரு தசரா கொண்டாட்டத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியருடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.

9 நாள்கள் நடைபெறும் தசரா கொண்டாட்டத்தில் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தசரா பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மைசூருவில் கொண்டாடப்படும் தசரா பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்நிலையில், தசரா பண்டிகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டது.

இதில், தசரா பண்டிகையில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

9 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிசனத்திற்கான முன்பதிவுக்கு aptemples.ap.gov.in. என்ற இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உதவும் வகையில் உதவி மையங்களும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே குடிநீர் வசதிகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

SCROLL FOR NEXT