பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி (கோப்புப்படம்) 
இந்தியா

உபியில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவகாரம்: அமித்ஷாவை சந்திக்கும் பஞ்சாப் முதல்வர்

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை பஞ்சாப் முதல்வர் சன்னி செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சந்திக்கிறார்.

DIN

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை பஞ்சாப் முதல்வர் சன்னி செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சந்திக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்தில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள்  மீது பாஜகவினர் வாகனங்களை ஏற்றியதாகக் கூறி இருதரப்பினரிடையேயான மோதலில் 9 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இதற்காக தில்லி சென்றுள்ள அவர் மாலை மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும். இதுபோன்ற (லக்கிம்பூர் கெரி) சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இன்றைய கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம்  இந்த பிரச்னையை குறித்து விவாதிப்பேன் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT