முகப்பு
இந்தியா

லக்கிம்பூர் வன்முறை: அமித் ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Updated On : 5 அக்டோபர், 2021 at 11:40 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:48 AM

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. 

Advertisement

இதையடுத்து, லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நேற்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டதுடன் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அதுதொடர்பான விரிவான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தார். 

மேலும் முதல்வராகப் பதவியேற்ற பின்னர், முதல்முறையாக மரியாதை நிமித்தமாக கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.