இந்தியா

விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் கேள்வி

DIN

பிரதமர் மோடிக்கு விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில்  மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமரிசித்து வருகின்றன.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக இருப்பதாகத் தெரிவித்த கேஜரிவால் ஒட்டுமொத்த அமைப்பும் குற்றவாளிகளைக் காப்பதில் குறியாக இருப்பதாகவும், இதனுடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஓராண்டாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகியுள்ளனர். பிரதமர் மோடிக்கு விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்கிம்பூர் செல்லும் எதிர்க்கட்சியினரை உத்தரப்பிரதேச அரசு தடுப்பு நிறுத்துவது கண்டிக்கத்தக்கது என தில்லி முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT