இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நெரிசல்: கேள்விக்குறியான சமூக இடைவெளி

நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பை விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூடியதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

DIN

நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பை விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூடியதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

9 நாள்களுக்கான நவராத்திரி கொண்டாட்டம் நேற்று முதல் தொடங்கியது. விழாவில் 9-ம் நாள் விஜய தசமி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

கூட்ட நெரிசலால் பலர் விமானங்களை தவறவிடும் நிலை ஏற்பட்டது. விமான நிலைய பாதுகாவலர்களும் பயணிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து விமான நிலையத்தில் பாதுகாவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் கரோனா பரவலை மறந்து ஏராளமான மக்கள் ஓரிடத்தில் கூடியதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தில்லி, மும்பை போன்ற பெருநகரங்களிலேயே இவ்வாறு விழிப்புணர்வை மறந்து செயல்படுவது அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT