மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,486 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,486 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,486 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65,75,578 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,446 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 63,99,464 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1,39,514 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 33,006 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.