இந்தியா

லக்கிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவருடன் ராகுல் சந்திப்பு

DIN

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து மனு அளித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 8 பேர் பலியாகினர். இச்சம்பத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வன்முறையில் நியாமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரியும் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி மனு அளித்தார்.

இந்த சந்திப்பின் போது காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT