இந்தியா

உ.பி. அருகே ரயிலின் 24 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவை பாதிப்பு

DIN

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 24 பெட்டிகள் வெள்ளிக்கிழமை காலை தடம் புரண்டதால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் மண்டலம் துண்ட்லா - கான்பூர் வழித்தடத்தில் அம்பியாபூர் மற்றும் ரூஷா ரயில் நிலையத்திற்கு இடையே இன்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு ரயிலின் 24 காலிப் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், துண்ட்லா - கான்பூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக வடமத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடமத்திய ரயில்வே மூத்த அதிகாரி மோஹித் சந்திரா கூறுகையில்,

“24 பெட்டிகள் தடம் புரண்டதால் இருவழிகளிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நள்ளிரவுக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றன. கான்பூரிலிருந்து ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT