கேரளத்தில் புதிதாக 7,643 பேருக்கு கரோனா
கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,643 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,643 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 77 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 10,488 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 47,60,781 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 27,002 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 80,262 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க | ‘40% பெண்களுக்கு வாய்ப்பு என பிரியங்கா காந்தி அறிவித்திருப்பது அரசியல் நாடகம்’: மாயாவதி
கடந்த 24 மணி நேரத்தில் 82,408 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 9.27 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
அங்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94 சதவிகிதத்தினர் (2.51 கோடி) குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் 46.2 சதவிகிதம் (1.23 கோடி) பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.