இந்தியா

உத்தரகண்ட் நிலச்சரிவு: 16 பேர் பலி

DIN

உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

உத்தரகண்ட்  மாநிலத்தில் அதிகப்படியான கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

முக்கியமாக சாமோலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருவதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நிலச்சரிவுகளின் மூலம் 16 பேர் வரை பலியாகியிருப்பதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி  தெரிவித்திருக்கிறார். மேலும் நிலைமையின் தீவிரம் அறிந்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உத்தரகண்டின் நிலை குறித்து தெரிந்து கொண்டார். மேலும் மாநிலத்திற்குத் தேவையான நிவாரணம் மற்றும் மீட்புப்பணி உதவிகளை விரைவாக வழங்குவதாகவும் மோடி உறுதியளித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT