இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 1,825 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 1,825 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதேசமயம், 2,879 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தது:

"புதிதாக 1,825 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65,96,645 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 21 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,39,886 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 64,27,426 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 25,278 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குணமடைவோர் விகிதம் 97.43 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.12 சதவிகிதம்."

மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 36 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT