இந்தியா

‘95 சதவிகித மக்களுக்கு பாஜக தேவையில்லை’: அகிலேஷ் யாதவ்

DIN

இந்தியாவில் 95 சதவிகித மக்களுக்கு பாஜக தேவையில்லை என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை பேசிய உத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி, மக்களின் தனிநபர் வருவாயை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெட்ரோல், டீசல் விலை அவ்வளவாக உயரவில்லை எனவும், நாட்டின் 95 சதவிகித மக்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 

இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், “சாதாரண மக்களை பெட்ரோல், டீசல் விலை உயர்வு பாதிக்கவில்லை என்றும், 95 சதவிகித மக்களுக்கு பெட்ரோல் தேவைப்படுவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

இப்போது அமைச்சருக்கும் கூட தன்னை அதிகாரத்தில் அமர வைத்த மக்கள் தேவையில்லை. உண்மையை சொல்லவேண்டுமென்றால் 95 சதவிகித மக்களுக்கு பாஜக தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT