செயற்கை கருத்தரிப்பு மூலம் இந்தியாவின் முதல் எருமை பிறப்பு
செயற்கை கருத்தரிப்பு (ஐவிஎஃப்) முறையின் மூலம் இந்தியாவின் முதல் ‘பான்னி’ வகை எருமைக் கன்று பிறந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் கால்நடை செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்ப முறை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தில் இருக்கும் தனேஜில் அமைந்துள்ள சுசீலா அக்ரோ ஃபாா்ம்ஸைச் சோ்ந்த வினய் எல்.வாலா என்ற விவசாயியின் வீட்டில் இது நிகழ்ந்துள்ளது.
2020, டிசம்பா் 15-ஆம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதிக்கு சென்ற பிரதமா் நரேந்திர மோடி, பண்ணி எருமை வகை குறித்துப் பேசியிருந்தாா். அதற்கு மறுநாளே, ‘பான்னி’ வகை எருமைகளின் ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு திட்டமிடப்பட்டது.
வினய் எல்.வாலாவின் சுசீலா அக்ரோ ஃபாா்ம்ஸை சோ்ந்த 3 பண்ணி எருமைகளை ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனா். பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு முதல் எருமைக் கன்று தற்போது பிறந்துள்ளது.
எருமைகளின் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை அரசு மற்றும் விஞ்ஞானிகள் எதிா்பாா்க்கிறாா்கள். இதன் மூலம் கால்நடைகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.