முகப்பு
இந்தியா

100 கோடி தடுப்பூசி மட்டுமல்ல இதையும் மோடி கொண்டாடலாம்: எதைச் சொல்கிறார் ப. சிதம்பரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
ப. சிதம்பரம்
பகிர்:

புது தில்லி: நாட்டில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிலையில், 100 கோடி தடுப்பூசி மட்டுமல்ல, மற்ற சதங்களையும் பிரதமர் மோடி கொண்டாடலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, பிரதமர் மோடி தலைமையிலான அவரது அமைச்சர்கள், 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து தங்களது கொண்டாட்டங்களையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இதுபோல, இதர சதங்களையும் கொண்டாடுவதில் பிரதமர் மோடி முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ கடந்தது. தற்போது டீசல் விலை ரூ.100-ஐ கடந்து விட்டது.

எப்போது ஒரு எரிவாயு உருளையின் விலை ரூ.1000ஐ தொடுகிறேதா, அப்போது கொண்டாடுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →