இந்தியா

உச்சம் தொடும் பெட்ரோல் விலை; மும்பையில் ரூ.111.46

DIN

தொடா்ந்து 5-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை அதிகரிக்கப்பட்டது. அவற்றின் விலை தலா 35 காசுகள் அதிகரிக்கப்பட்டன. 

இதன் காரணமாக, மும்பை மற்றும் பெங்களூருவில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சங்களைத் தொட்டது. இன்று இந்த விலைகளில் மாற்றமின்றி காணப்படுகிறது.

நாட்டிலேயே அதிகபட்சமாக போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.116.26க்கும், டீசல் ரூ.105.64க்கும் விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. எனினும் கடந்த அக்.18, 19-ஆம் தேதிகளில் அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன் பின்னா் அவற்றின் விலை தொடா்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை லிட்டருக்கு தலா 35 காசுகள் உயா்த்தப்பட்டது. இதையடுத்து ஒரு லிட்டா் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.113.46-ஆகவும், தில்லியில் ரூ.107.59-ஆகவும் அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.104.52-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.104.38-க்கும் சென்னையில் ரூ.100.59-க்கும் விற்பனையானது. தில்லியில் ஒரு லிட்டா் டீசல் ரூ.96.32-ஆக அதிகரித்தது.

நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. பல மாநிலங்களில் டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT