இந்தியா

எல்லைப் பாதுகாப்புப் படை அதிகார வரம்பு விரிவாக்கத்துக்கு எதிராக தீர்மானம்: பஞ்சாப் முதல்வர்

DIN

எல்லைப் பாதுகாப்புப் படை அதிகார வரம்பு விரிவாக்கத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

சர்வதேச எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பானது 15 கி.மீ. இருந்து 50 கி.மீ. ஆக அதிகரிக்கப்படுவதாக கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்த அறிவிப்பிற்கு எதிராக எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்பு மாநில சட்டங்கள், காவல்துறைக்கு இடையூறாக அமையும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் சரண்ஜீத் இன்று அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சி மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சரண்ஜீத் கூறுகையில்,

“இது பஞ்சாப் மற்றும் பஞ்சாப் மக்கள் தொடர்புடைய விவகாரம். சட்டம் - ஒழுங்கு பிரச்னை மாநிலத்தின் செயல்பாடு மற்றும் கூட்டாச்சி அமைப்பில் மாநில அரசின் உரிமைகள் மீதான சோதனை என்பதால், அறிவிப்பை திரும்பப்பெற வைக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும். மேலும், இந்த விவகாரத்தில் நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்.

இன்னும் 10 முதல் 15 நாள்களில் பஞ்சாப் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகார வரம்பு விரிவாக்கம் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT