முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து, உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி நாளை சந்திக்கவிருக்கிறார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து, உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி நாளை சந்திக்கவிருக்கிறார். 

உத்தரகண்ட் மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இதற்காக உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர்களை செவ்வாய்க்கிழமை தில்லிக்கு அழைத்துள்ளார். 

தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநிலத் தலைவர்களுடன் சோனியா காந்தி விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உத்தரகண்டில் பேரிடர் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசிப்பார் என்று தெரிகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →