இந்தியா

தில்லியில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு

DIN

தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை முதல் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வரலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கட்டாயப்படுத்த மாட்டார்கள். ஏனெனில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

50 சதவீதத்திற்கு மேலான மாணவர்கள் ஒரே நேரத்தில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட மாட்டார்கள். பள்ளிகள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும், குறைந்தது 98 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி போட்டுள்ளனர்" என்றார்.

தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்ட பிறகு, மணிஷ் சிசோடியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது, 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்பு நடத்தப்பட்டுவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT