இந்தியா

கான்டாக்ட் லென்ஸைக் கண்டுபிடித்த விக்டர்லேயின் 108 ஆவது பிறந்தநாள்: கௌரவப்படுத்திய கூகுள்!

DIN

செக்கோஸ்லோவேகியா விஞ்ஞானியின் பிறந்தநாளையொட்டி பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு கௌரவித்துள்ளது. 

செக்கோஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஓட்டோ விக்டர்லேயின் 108 ஆவது பிறந்தநாள் இன்று. 1913 ஆம் ஆண்டு அக்டோபர் 27ல் செக்கோஸ்லோவேகியா குடியரசின் (அப்போதைய ஆஸ்திரியா-ஹங்கேரி) ப்ரோஸ்டெஜோவில் விக்டர்லே பிறந்தார்.

அறிவியலில் அதீத ஆர்வம் கொண்ட விக்டர்லே, 1936 ஆம் ஆண்டில் ப்ராக் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1950களில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் தனது ஆய்வில், கண் சிகிச்சையில் பயன்படுத்தும் ஜெல்லைக் கண்டுபிடித்தார். அதன் தொடர்ச்சியாக கான்டக்ட் லென்ஸைக் கண்டுபிடித்தார். 

கண் பார்வை குறையுடையவர்களுக்கு கண்ணாடிக்கு மாற்றாக, மென்மையான கான்டாக்ட் லென்ஸைக் கண்டுபிடித்த இவரின் பிறந்தநாளை கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டு கூகுள் கௌரவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT