இந்தியா

ஆர்யன் கானின் பிணை விதிகள் நாளை(அக்.29) அறிவிக்கப்படும்- மும்பை உயர்நீதிமன்றம்

DIN

போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு பிணை வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்.

கடந்த அக்.3-ஆம் தேதி மும்பை-கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். 

இந்த சோதனையின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 13 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் இன்று ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் வேண்டுகோளை நிராகரித்து கைதான 25 நாட்கள் கழித்து பிணை வழங்கியிருக்கிறது.

மேலும் பிணை விதிகள் குறித்து நாளை(அக்.29) தெரிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT