முகப்பு
இந்தியா

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு நடிகர் அஜித் குமார் இரங்கல்

மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு நடிகர் அஜித்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 அக்டோபர், 2021 at 9:27 PM
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு நடிகர் அஜித் குமார் இரங்கல்
பகிர்:

மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு நடிகர் அஜித்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புனித் ராஜ்குமாரின் மரணச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்தத் துயரிலிருந்து மீண்டு வரும் வலிமை கிடைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் நாளை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.